கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 55 வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஏப்ரல் 11ம் தேதி தொடங் கியது. ஆக்ஷன் மற்றும் காதலை மையமாக உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தை அஜித்தின் முந்தைய படங்களான ‘ஆரம்பம்’, ‘வீரம்’ ஆகிய படங்களைப் போல அதிக கதாபாத்திரங்களை கொண்டு படமாக்கத் திட்ட மிட்டுள்ளனர். முதல் கட்டமாக அஜித்தின் ஆக்ஷன் பிளாக் சம்பந்தபட்ட காட்சிகளை சென்னையில் படமாக்கிய கையோடு ஹைதராபாத்திலும் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அஜித், அனுஷ்கா இணைந்து நடிக்கும் குறிப்பிட்ட சில காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளன.
இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். படத்தின் வசனம் தர் ராகவன், கலை இயக்குநர் ராஜீவன், காஸ்டியூம் டிசைனர் உத்ரா ஆகியோர் ஒப்பந்தமாகியிருப்பதும் தற் போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.