தமிழ் சினிமா

அஜித்தின் தொடர் ரிஸ்க்: ஸ்டண்ட் சில்வா சிலிர்ப்பு

செய்திப்பிரிவு

அஜித் தொடர்ச்சியாக தனது படங்களின் சண்டைக் காட்சிகளுக்காக எடுத்து வரும் சிரத்தை எண்ணி சண்டைப் பயிற்சி இயக்குநர் 'ஸ்டண்ட்' சில்வா வியப்படைந்துள்ளார்.

'மங்காத்தா', 'வீரம்', 'என்னை அறிந்தால்' என தொடர்ச்சியாக அஜித் நடித்த படங்களில் சண்டை இயக்குநராக பணியாற்றி வருபவர் 'ஸ்டண்ட்' சில்வா.

'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து 'ஸ்டண்ட்' சில்வா கூறியிருப்பது:

"இயக்குநர் வெங்கட்பிரபு தான் என்னை அஜித் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மங்காத்தாவின் சண்டை காட்சிகள் மிகவும் பேசப்பட்டது. சிவா சார்கூட முன்னரே பணி புரிந்திருந்ததால் வீரம் கிடைத்தது. அதில் ரயில் சண்டைக்காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் அந்த கூட்டணியை தொடர்ந்துள்ளார் கௌதம் சார். அவருடனும் விண்ணைத்தாண்டி வருவாயா , நடுநிசி நாய்கள் என நான்கு படங்கள் வேலை செய்துள்ளோம். அஜித் சார்க்கும் என்னை பிடிக்கும் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்”.

'என்னை அறிந்தால்' படத்தில் அனைத்து சண்டைக் காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக செய்திருக்கிறோம். அஜித் சார் எதாவது ஒரு ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்பி விட்டுவிடுவார். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இந்த படத்தில் அஜித் தன் தலையை வைத்து உண்மையான கண்ணாடியை உடைத்திருக்கிறார். இப்படத்தில் சின்ன வேடத்தில் கெளதம் சார் நடிக்கச் சொன்னார் அதனால் நடித்திருக்கிறேன்.

'என்னை அறிந்தால்' படத்திற்காக சென்னையில் நிறையா படப்பிடிப்பு நடத்தினோம். எல்லாரிடமும் அக்கறையா இருப்பார் அஜித். சண்டை காட்சிகளின் போது ஸ்பாட்டில் அனைவரது பாதுகாப்பை பற்றி பெரிதும் கவனம் கொள்வார். சிறு தவறு செய்தாலும் பெரியவர் சிறியவர் என்று பாராமல் உடனே ‘சாரி’ கேட்டு விடுவார். 'சாரி' மற்றும் 'தேங்க்ஸ்' மனிதனின் அகந்தையை குறைத்து விடும் என்று அடிக்கடி கூறுவார். அவரது விடா முயற்சி என்னை பெரிதும் மலைக்க வைத்த ஒன்று. எதையும் முடியாது என்று கூறமாட்டார்." என்றார்.

SCROLL FOR NEXT