தனுஷ் , அமைரா தஸ்தூர் நடித்துள்ள 'அனேகன்' திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13-ல் ரிலீஸ் ஆகிறது.
இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில் தனுஷூம், அமைரா தஸ்தூரும் நான்கு விதமான தோற்றங்களில் நடித்துள்ளனர்.
'ஐ', 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களின் வருகையால் 'அனேகன்' வெளியீட்டு தேதியை முடிவு செய்யாமல் இருந்தனர்.
ஜனவரி 14ல் 'ஐ', ஜனவரி 29ல் 'என்னை அறிந்தால்' என அடுத்தடுத்து பெரிய படங்கள்வெளியாகும் நிலையில், பிப்ரவரி 13ல் 'அனேகன்' வெளியாவது உறுதியாகியுள்ளது.
'அனேகன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'டங்காமாரி' பாடல் இணையத்தினை கலக்கி வருகிறது. சமீபத்தில் வெளியான 'அனேகன்' ட்ரெய்லரை 10 லட்சத்துக்கும் மேலான ரசிகர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.