திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று நடிகர் அஜித் தனது பெற்றோருடன் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று முன் தினம் திருமலைக்கு வந்த அஜித் இரவு விடுதியில் தங்கினார்.
பின்னர் நேற்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் தனது பெற்றோருடன் சேர்ந்து சுவாமியை தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானத்தினர் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
தரிசனம் முடிந்து கோயிலுக்கு வெளியே வந்த நடிகர் அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு கைகுலுக்கியும், ஆட்டோகிராப் வாங்கியும் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர். பின்னர் அவர் திருமலையில் இருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.