தமிழ் சினிமா

ரசிகர்களை சந்தித்தார் ரஜினி

செய்திப்பிரிவு

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனக்கு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார்.

ரஜினியின் 65-வது பிறந்தநாள் கடந்த டிசம்பர் 12-ம் தேதி கொண் டாடப்பட்டது. அன்றைய தினம் அவர் நடித்த ‘லிங்கா’ படம் ரிலீஸ் ஆனதால் அவர் ரசிகர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அன்றைய தினம் ரஜினிகாந்த், ரசிகர்களை சந்திக்க வில்லை.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ரஜினிகாந்தை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் நேற்று காலை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டருகே குவிந்தனர்.

ரசிகர்கள் தன்னை சந்திக்க வந்திருப்பதை அறிந்த ரஜினிகாந்த், வீட்டுக்கு வெளியில் வந்து அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SCROLL FOR NEXT