தமிழ் சினிமா

சித்தார்த்தால் நான் பாதிக்கப்படவில்லை: நடிகை சமந்தா

ஸ்கிரீனன்

சக நடிகர் சித்தார்த்தால் தாம் எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்று நடிகை சமந்தா தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் நீண்ட காலமாகவே மிக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இருவருமே காதல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்த்து வந்தனர்.

இந்த நிலையில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக வெளியான செய்தி ஒன்று, சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இது தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள நடிகை சமந்தா, "பத்திரிகையில் வந்திருக்கும் செய்தி, என்னை ஏதோ பாதிக்கப்பட்ட பெண் போல சித்தரித்துள்ளது. நான் பாதிக்கப்படவில்லை. சித்தார்த் அருமையானவர். தனிப்பட்ட விஷயங்களில் ஊடகங்கள் நுழைவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரமிற்கு ஜோடியாக '10 எண்றதுக்குள்ள', வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT