தமிழ் சினிமா

சமூக வலைத்தளங்களை பரபரப்பாக்கிய என்னை அறிந்தால் டீஸர்!

ஸ்கிரீனன்

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 'என்னை அறிந்தால்' டீஸர் பற்றிய கருத்துகள் குவிந்து வருகின்றன. பிரபலங்கள் பலரும் டீஸருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘என்னை அறிந்தால்’ டீஸர் யு-டியூப் இணையத்தில் வெளியானது.

டீஸர் வெளியான 12 மணி நேரத்திற்குள்ளாகவே 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு இருக்கிறார்கள்.

“ஒரு மெல்லிசான கோடு, கோடுக்கு இந்த பக்கம் இருந்தன்னா நல்லவன், அந்த பக்கம் போய்ட்டன்னா ரொம்ப கெட்டவன்.. இந்தப் பக்கமா இல்ல அந்தப் பக்கமான்னு முடிவு பண்ண நேரம் வந்துச்சு வாழ்க்கைல, ஒரு நாள்… வாழ்க்கை என்னை ஒரு தரம் மாத்துச்சு,” என்று டீஸரில் அஜித் பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தனுஷ், சிம்பு, இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் 'என்னை அறிந்தால்' டீஸருக்கு தங்களது வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

ட்விட்டர் தளத்தில் டீஸர் வெளியாவதை ஒட்டி அஜித் ரசிகர்கள் முன்னரே தொடங்கிய #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற ஹெஷ்டேக் தொடர்ச்சியாக இந்திய அளவில் முதல் இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT