தமிழ் சினிமா

திரைக்கதை எழுதி வருகிறேன்: ஏ.ஆர். ரஹ்மான்

ஐஏஎன்எஸ்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு திரைப்படத்திற்கான கதையை எழுதி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இயக்கத்தினை வேறொருவர் கவனிப்பார் என்றும், அந்தப் படத்தின் இணை தயாரிப்பில் தன் பங்கு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு திரைப்படத்தை இயக்கலாம் என நீண்ட நாட்களாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் உலவி வந்தன. அதனை தற்போது ரஹ்மான் தெளிவாக்கியுள்ளார்.

இது குறித்து பேசுகையில், "எனக்கு இயக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தற்போது ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன். இணைந்து தயாரிக்கவும் உள்ளேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன" என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

SCROLL FOR NEXT