12வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் டிசம்பர் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற இருக்கிறது
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா டிசம்பர் 18 முதல் 25 வரை நடைபெற இருக்கிறது.
ஈரான், பிரான்சு, துருக்கி, நெதர்லாந்து, ஹங்கேரி உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த 171-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிட இருக்கிறார்கள். இந்தியன் பனோரமா பிரிவில் 17 படங்களும், தமிழ் படங்கள் 12 படங்களும் இதில் அடக்கம்.
தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் மொத்தம் 22 படங்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். 'என்னதான் பேசுவதோ', 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', 'முண்டாசுப்பட்டி', 'தெகிடி', 'குற்றம் கடிதல்', 'சிகரம் தொடு', 'வெண்ணிலா வீடு', 'பண்ணையாரும் பத்மினியும்', 'பூவரசம் பீப்பீ', 'சதுரங்க வேட்டை', 'மெட்ராஸ்', 'சலீம்' ஆகிய 12 படங்கள் போட்டிக்கு தேர்வாகி இருக்கின்றன. சிறந்த முதல் படம், இரண்டாவது படம் மற்றும் சிறப்பு விருது என மூன்று விருதுகள் தமிழ் படங்களுக்கு வழங்க இருக்கிறார்கள்.
சென்னையில் ஐநாக்ஸ் - 2 திரையரங்குகள், உட்லண்ட்ஸ் - 2 திரையரங்குகள், கேசினோ, ரஷ்ய கலாச்சார மையம் ஆகிய 6 திரையரங்குகளில் தினமும் 5 காட்சிகள் திரையிட இருக்கிறார்கள்.