கே.பாலசந்தர் இயக்கத்தில் நடிக்காதது தனது துரதிர்ஷ்டம் என்று நடிகர் விஜய் தனது ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இன்று பாலசந்தர் உடலுக்கு அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் அதனைத் தொடர்ந்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“உங்கள் இயக்கத்தில் நான் நடிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை. எனினும் நீங்கள் தயாரித்த படத்தில் நான் பணியாற்றியதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
இந்திய சினிமாவுக்காக நீங்கள் வழங்கிய அனைத்திற்கும் நன்றி.”
இவ்வாறு தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.