பாலசந்தரின் முதல் நாடகம் தொடங்கி புகழ்பெற்ற நாடகங்க ளான மெழு குவர்த்தி, எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த் ஆகிய நாடகங்களின் உருவாக் கத்தை அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. 1969-ல் அரங்கேற்றிய என்னுடைய முதல் நாடகமான (பிளைட் 172) 50-வது காட்சிக்கு வந்திருந்து என்னை பாராட்டினார்.
`அரங்கேற்றம்’ படத்துக்கு ஒரு காமெடி டிராக் எழுதச் சொன்னார். நானும் எழுதிக் கொண்டு சென்றேன். எடுத்தவரை படத்தை `ரஷ்’ போட்டு பார்த்தோம். என்னிடம் எங்கே காமெடி டிராக்கை சேர்க்கலாம் என்று நீயே பார் என்றார். இவ்வளவு சீரியஸான படத்தில் இந்த காமெடி டிராக் இல்லாமல் இருந்தாலே நல்லது சார் என்றேன். அப்படியா.. நீ எழுதி எடுத்திட்டுவந்த சீன்களை கொடுத்திட்டுப் போ, நான் பார்த்துக் குறேன்.. என்று சொன்னார். நல்லவேளை அந்த படத்தில் அந்த காமெடி டிராக்கை வைக்கவில்லை.
`நிழல் நிஜமாகிறது’ படத்தில் மன்மத நாயுடு என்னும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்துக்கு காமெடி டிராக் எழுதியதும் நான்தான். இந்தப் படத்தின் மலையாள மூலத்தில் இந்த காமெடி டிராக் கிடையாது.
என்னுடைய `ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது’ திரைப்படத்தின் 200-வது நாள் விழாவுக்கு தலைமை தாங்கியபோது, “என்னுடைய தயாரிப்பில் அடுத்த படத்தை மௌலி இயக்குவான்…” என்று விழா மேடையிலேயே அறிவித்தார். அந்தப் படம்தான் `அண்ணே அண்ணே’. அவரிடம் நான் அசிஸ்டென்டாகப் பணியாற்றவில்லையே தவிர, அவரைப் பார்த்து உருவானவன் நான். இந்த ஏகலைவனுக்கு அவர்தான் துரோணர்!