தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த விஜய்!

ஸ்கிரீனன்

தனது ரசிகர்கள் 600-க்கும் மேற்பட்டோரை சந்தித்து அவர்களுடன் பேசி, புகைப்படம் எடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய்.

2014-ம் ஆண்டில் 'ஜில்லா', 'கத்தி' ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார் விஜய். 'ஜில்லா' எதிர்பார்த்த வரவேற்பை பெறாவிட்டாலும், 'கத்தி' பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களுக்குமே விஜய் தனிப்பட்ட முறையில் பேட்டிகள் என எதுவுமே விளம்பரப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சென்னையில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது. விரைவில் கேரளாவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு இன்று வீட்டில் ஒய்வில் இருப்பதால் ரசிகர்களை சந்திக்க முடிவு செய்திருக்கிறார். இதனால் 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் சுமார் 600-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஈ.சி.ஆரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த விஜய், அனைவருடன் கலந்துரையாடிவிட்டு தனித்தனியாக புகைப்படம் எடுத்து புத்தாண்டு வாழ்த்துகளுடன் அனுப்பி வைத்திருக்கிறார். எவ்வித முக சுழிப்பும் இன்றி புகைப்படத்திற்கு நின்ற பணிவை அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT