தமிழ் சினிமா

ஜனவரியில் வெளியாகிறது அனேகன்

ஸ்கிரீனன்

தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'அனேகன்' திரைப்படம் ஜனவரியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆகியும், 'லிங்கா', 'ஐ', 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களின் வருகையால் 'அனேகன்' வெளியீட்டு தேதியை முடிவு செய்யாமல் இருந்தனர். தற்போது பெரிய படங்கள் வெளியீட்டு தேதி முடிவாகிவிட்டது.

இந்நிலையில், 'அனேகன்' ஜனவரியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருக்கிறார்கள். ஜனவரியின் தொடக்கத்தில் 'ஐ', 'என்னை அறிந்தால்' வெளியாவதால், ஜனவரி கடைசியில் 'அனேகன்' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'அனேகன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'டங்காமாரி' பாடல் இணையத்தினை கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT