தமிழ் சினிமா

தொடங்கியது நானும் ரவுடி தான் படப்பிடிப்பு

செய்திப்பிரிவு

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'நானும் ரவுடி தான்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதியிடம் "இங்குள்ள நடிகைகளில் 'சூது கவ்வும்' படத்தின் பின்னணி இசையில் யாரைக் கடத்த ஆசைப்படுகிறீர்கள்?" என்ற கேள்விக்கு அவர் எவ்வித யோசனையும் இல்லாமல் கூறிய பதில் "நயன்தாரா".

அதனைத் தொடர்ந்து "உங்களுக்கு நயன்தாராவை எந்தளவிற்கு பிடிக்கும்?" என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளிக்காமல், தனது வெட்கத்தையே பதிலாக்கினார். அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஹைலைட்டாக விஜய் சேதுபதியின் நிகழ்வு அமைந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் ஒன்றாக இணைத்து படம் தயாரிக்க திட்டமிட்டார் தனுஷ்.

அனிருத் நாயகனாக நடிக்க, 'போடா போடி' இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த 'நானும் ரவுடி தான்' படத்தை விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்க, நான் தயாரிக்க இருப்பதாக தனுஷ் அறிவித்தார்.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு, அனிருத் இசை என படத்தின் தலைப்பு வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்தையுமே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். படப்பிடிப்பு எப்போது என்பது மட்டும் அறியாமல் இருந்தது.

இன்று முதல் 'நானும் ரவுடி தான்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உடன் ஆர்.ஜே. பாலாஜியும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT