தமிழ் சினிமா

சிகப்பு ரோஜாக்கள் பார்த்ததால் ஏற்படும் பாதிப்பு சிகப்பு ரோஜாக்கள் 2

ஸ்கிரீனன்

'சிகப்பு ரோஜாக்கள்' படத்தைப் பார்த்ததினால் ஒருவனுக்கு ஏற்படும் பாதிப்பால் என்னவாகிறது என்பதை பின்னணியாக கொண்டது தான் 'சிகப்பு ரோஜாக்கள் 2' கதை.

கமல், ஸ்ரீதேவி நடிக்க, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. 1978ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்து இருந்தார்.

தற்போது புதுமுக நடிகர் விசாகன் நடிக்க, 'சிகப்பு ரோஜாக்கள் 2' படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பாரதிராஜா தயாரிக்கிறார்.

'சிகப்பு ரோஜாக்கள்' படம் பார்க்கும் பையன் ஒருவனுக்கு, அப்படத்தின் பாதிப்பினால் என்னவாகிறது என்பதை பின்னணியாகக் கொண்டு கதை எழுதியிருக்கிறார் பாரதிராஜா. இப்படத்தில் பாரதிராஜா, 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் இயக்குநர் பாரதிராஜாவாகவே நடிக்க இருக்கிறார். படத்தின் பின்பாதியில் வரும் காட்சிகளை சுவிட்சர்லாந்தில் படமாக்க இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT