தமிழ் சினிமா

அஜித்துடன் 3 படங்களா? - போனி கபூர் விளக்கம்

செய்திப்பிரிவு

அஜித்துடன் 3 படங்களுக்கான ஒப்பந்தம் என்ற செய்தி பொய் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

பின்க் படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரித்துள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். படம் இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள நிலையில் போனி கபூர், அஜித்குமாரை வைத்து 3 படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார் என்பது போல செய்திகள் வந்தன.

அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். மேலும், படம் குறித்து அவர் கொடுத்த பேட்டிகளில், அஜித்துக்கு சரி என்றால் தொடர்ந்து அவருடனே பணியாற்றத் தயார். அப்படி ஒரு சிறந்த மனிதர், கலைஞர் அவர் என்கிற ரீதியில் போனி கபூர் பேசியிருந்தார். இதனால் 3 பட ஒப்பந்த செய்தி உண்மையோ என பலரும் பகிர்ந்து வந்தனர். தற்போது போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

"அஜித்துடன் 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன் என்று ஒரு பொய்யான செய்தியை ஊடகங்களில் பார்க்கிறேன். தெளிவுபடுத்திவிடுகிறேன். நேர்கொண்ட பார்வைக்குப் பின் ஒரு ஆக்‌ஷன் படத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். அவர் ஒரு இந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இன்னும் உறுதி செய்யவில்லை" என்று போனி கபூர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT