தமிழ் சினிமா

நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற மாதவனின் மகன்: ட்விட்டரில் பெருமிதம்

ஸ்கிரீனன்

நடிகர் மாதவனின் மகன் தேசிய நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இது குறித்து மாதவன் ட்விட்டரில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் இதற்கு முன், தாய்லாந்தில் நடந்த ஃப்ரீஸ்டைல் பிரிவு நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார். தற்போது, தேசிய அளவில் நடந்த் நீச்சல் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்ததாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகியுள்ளார்.

இது குறித்து மாதவன், "உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன், நல்வாழ்த்துகளுடன், கடவுளின் கிருபையுடன் வேதாந்த் மீண்டும் எங்களை பெருமைப்படுத்தியுள்ளான். ஜூனியர் தேசிய நீச்சல் போட்டியில் 3 தங்கங்கள், ஒரு வெள்ளி. அவனது முதல் தனி தேசியப் பதக்கங்கள். அடுத்தது ஆசியப் போட்டிகள். மும்பை க்ளென்மார்க் ஃபவுண்டேஷனுக்கு நன்றி. அனைத்துப் பயிற்சியாளர்கள் மற்றும் அணி உறுப்பினர்களுக்கு நன்றி" என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மாதவனின் இந்த ட்வீட்டுக்கு, அவரது திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT