தமிழ் சினிமா

அமலாபாலின் தைரியம்: ரம்யா ஆச்சர்யம்

செய்திப்பிரிவு

இந்தியாவிலேயே அமலாபால் மாதிரி தைரியமாக யாராவது இருப்பார்களா என்ற தெரியாது. மகளிரைக் கொண்டாடும் மாதம் இது என்று நிகழ்ச்சித் தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யா பேசினார்.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி, ரம்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆடை'. தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஜுலை 19-ம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸர் மற்றும் இன்று (ஜூலை 6) வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இதில் நடிகை ரம்யா பேசுகையில், ''இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்து நன்றாக நடிப்பு வரும் என்று சிறந்த கதாபாத்திரம் கொடுப்பார்கள். ஆனால் ஒரு தொகுப்பாளினியான என் மேல் நம்பிக்கை வைத்து 'ஜெனி' கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரத்னகுமாருக்கு நன்றி.

‘மைனா’ படத்திலிருந்தே அமலாபாலுடன் எனக்கு நெருக்கமாக நட்பு இருந்தது. இடையில் சிறிது இடைவெளி இருந்தது. இப்படம் மூலம் மீண்டும் எங்கள் நட்பு தொடர்ந்தது. இம்மாதிரியான படத்தில் நடித்திருப்பதில் எனக்கு பெருமை. இந்தியாவிலேயே அமலாபால் மாதிரி தைரியமாக யாராவது இருப்பார்களா என்ற தெரியாது. மகளிரைக் கொண்டாடும் மாதம் இது'' என்றார் ரம்யா.

முன்னதாக, நடிகை அமலாபால் பேசுகையில், ஆடையில்லாக் காட்சிகளைப் படமாக்கிய அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT