தமிழ் சினிமா

த்ரில்லர் படத்தை இயக்கும் நடிகர் பாவல் நவகீதன்

செய்திப்பிரிவு

’வட சென்னை’, ’மெட்ராஸ்’, ’மகளிர் மட்டும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பாவல் நவகீதன் இயக்குநராகிறார்.

குற்ற விசாரணை பின்புலத்தில் த்ரில்லர் படமாக உருவாகும் இதில் அருண் காஸ்ட்ரோ நாயகனாக நடிக்கிறார். விஷ்ணுப்ரியா நாயகியாக நடிக்கிறார். படத்துக்கு வி 1 என்று பெயரிடப்பட்டுள்ளது

"நான் துறைக்கு வந்தது இயக்கத்தான். ஆனால் நடிப்பு வாய்ப்பு வந்தது. சரியான திரைக்கதைக்காக காத்திருந்து வி 1 கதையை இறுதி செய்தேன். ஒரு அபார்ட்மெண்ட்டில் வி1 என்ற எண் கொண்ட வீட்டில் நடக்கும் கொலை பற்றிய நாயகனின் விசாரணையே படம். ஆனால் நாயகனுக்கு இருட்டைப் பார்த்தால் பயம் என்ற பிரச்சினை இருக்கும்.

விஷ்ணுப்ரியா நாயகனுக்கு உதவும் பெண் போலீஸாக நடிக்கிறார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் முறையில் கதை சொல்லியிருக்கிறேன். தடயவியல் நிபுணர்களிடம் பேசி, பல போலீஸ் அதிகாரிகளை சந்தித்து ஒரு கொலை விசாரணை பற்றிய விரிவான தகவல்களை சேகரித்து விட்டுத்தான் படத்தை ஆரம்பித்தோம்" என்கிறார் இயக்குநர் நவகீதன்.

SCROLL FOR NEXT