தமிழ் சினிமா

சிம்புவுடன் நடனமாடும் சரோஜாதேவி: இது வாலு ஸ்பெஷல்

செய்திப்பிரிவு

'வாலு'வில் இடம்பெற்ற 'தாறுமாறு' பாடலில் சிம்புவுடன் நடனமாட இருக்கிறார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி. விரைவில் இப்பாடலில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் படம் 'வாலு'. தமன் இசையமைத்து வரும் இப்படத்தை எஸ்.சக்கரவர்த்தி தயாரித்து வருகிறார். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.

தற்போது இப்படத்தின் டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் முடிந்திருக்கிறது. இன்னும் 'தாறுமாறு' என்ற பாடல் மட்டுமே காட்சிப்படுத்த இருக்கிறார்கள். இப்பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் ஆகியோரது கெட்டப்களில் தோன்றி நடனமாட இருக்கிறார். இதில் ஒவ்வொரு கெட்டப்க்கிற்கும் ஒவ்வொரு நடிகை நடனமாட இருக்கிறார்கள்.

இதில் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் நடனமாடுவதற்கு பழம்பெரும் நடிகை சரோஜாதேவி சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் இப்பாடலின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

ரஜினி கெட்டப்பிற்கு குஷ்பு, அஜித் கெட்டப்பிற்கு சிம்ரன் மற்றும் சிம்பு நடனமாடும் போது நயன்தாரா ஆகியோர் நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து படக்குழுவினரிடம் கேட்ட போது, "பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அனைத்தையும் முடிந்தவுடன் முறைப்படி அறிவிப்போம்" என்று தெரிவித்தார்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT