தமிழ் சினிமா

தல ருத்ரதாண்டவம்: விவேகம் ட்ரெய்லருக்கு திரையுலகினர் பாராட்டு

செய்திப்பிரிவு

அஜித்குமார் நடிப்பில் ஆகஸ்ட் 24ஆம் தேதி 'விவேகம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. 'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் சிவாவுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். ஏற்கனவே டீஸர் மற்றும் பாடல்களுக்கு ஏகொபித்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் நேற்றிரவு வெளியிடப்பட்டது.

ட்ரெய்லருக்கும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தரத்தில் இருப்பதாக பலரும் பாராட்டியுள்ளனர். பல திரை நட்சத்திரங்களும் ட்விட்டரில் ட்ரெய்லரைப் பகிர்ந்து படக்குழுவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி

விவேகம் ட்ரெய்லர் வெறித்தனமாக இருக்கிறது. அஜித் சார், சிவா சார் மற்றும் குழுவுக்கு வாழ்த்துகள்.

சிவகார்த்திகேயன்

தல வெறித்தனம். அட்டகாசமான ட்ரெய்லர். ஆகஸ்ட் 24ஆம் தேதிக்காக காத்திருக்கிறேன்.

மதன் கார்க்கி

விவேகம் ட்ரெய்லர் கண்டிப்பாக சர்வதேச தரத்தில் இருக்கிறது. இயக்குநர் சிவா, அஜித் சார், அனிருத் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவின் கடின உழைப்பு தெரிகிறது. ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

சூரி

 தல ருத்ரதாண்டவம். மாஸ் ட்ரெய்லர்.

பிரசன்னா

தல ஆக்ரோஷ முழுவதும். மாஸ்-க்ளாஸ் இணைந்த சரியான கலவை. இயக்குநர் சிவா மிகச்சரியாக எடுத்திருக்கிறீர்கள்.

இயக்குநர் சுசீந்திரன்

அற்புதமான ட்ரெய்லர். சூப்பர். இயக்குநர் சிவா, அஜித் சார் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

SCROLL FOR NEXT