அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, செர்பியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விவேகம்'. சில காட்சிகள் தவிர, இதர படப்பிடிப்பு அனைத்தையும் ஐரோப்பா நாட்டில் படப்பிடிப்பு செய்து முடித்துள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கு முன்பாக, படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை ஆரம்பித்து துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செர்பியா நாட்டிற்கு இறுதிகட்ட படப்பிடிப்புகாக சென்றுள்ளது படக்குழு. 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு என்றும், இதில் அஜித் மற்றும் விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.
காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்ய ஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.