அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் டீஸர் மே 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மே 10-ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து ஆகஸ்ட் 10-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
இந்நிலையில், அஜித் பிறந்த நாளன்று 'விவேகம்' படத்தின் டீஸர் வெளியிட திட்டமிட்டு இருந்தது படக்குழு. ஆனால், அஜித் என்றாலே வியாழக்கிழமை தான் போஸ்டர், டீஸர் மற்றும் பட வெளியீடு என அனைத்துமே இருக்கும் என்பதால் மே 18-ம் தேதியன்று வெளியிட படக்குழு முடிவு செய்தது.
தற்போது மே 11-ம் தேதி 'விவேகம்' டீஸர் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டீஸருக்கான இறுதிக்கட்டப் பணிகளை கவனித்து வருகிறார் எடிட்டர் ரூபன்.