தமிழ் சினிமா

மார்ச் 2 முதல் இறுதிகட்ட படப்பிடிப்பு: வெளியீட்டில் தாமதமாகும் விவேகம்

ஸ்கிரீனன்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் 'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மார்ச் 2ம் தேதி முதல் பல்கேரியாவில் தொடங்குகிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. இரண்டாம் கட்டமாக மீண்டும் பல்கேரியாவுக்கு சென்று சில முக்கியமான காட்சிகளை படமாக்கியது படக்குழு.

காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் பல்கேரியா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். 'விவேகம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இறுதிகட்ட படப்பிடிப்பு எப்போது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. தற்போது மார்ச் 2ம் தேதி முதல், மீண்டும் பல்கேரியாவில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவு பெறவுள்ளது.

இறுதிகட்ட பணிகள் அனைத்தையும் முடித்து, ரம்ஜான் விடுமுறைக்கு வெளியிட முதலில் திட்டமிட்டது படக்குழு. ஆனால், படப்பிடிப்பு தாமதமானக் காரணத்தினால், தற்போது சுதந்திர தின விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். மேலும், டீஸர் வெளியீட்டு பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

SCROLL FOR NEXT