கடும் போட்டிக்கு இடையே 'விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல்' தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய ஜி தமிழ் கைப்பற்றியது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய், சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
'மெர்சல்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை யாருக்கும் விற்காமல் வைத்திருந்தது தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். இந்த உரிமையைக் கைப்பற்ற முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் கடும் போட்டியிட்டன.
இறுதியாக ஜி தமிழ் தொலைக்காட்சி நிறுவனம், சுமார் 30 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே '2.0' படத்தின் அனைத்து மொழி தொலைக்காட்சி உரிமையையும் சுமார் 100 கோடிக்கு ஜி நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வரும் 'மெர்சல்' படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
'மெர்சல்' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.