தமிழ் சினிமா

‘சிறந்த திரையுலக பிரமுகர்: நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு விருது

செய்திப்பிரிவு

45-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் ரஜினிகாந்துக்கு சிறந்த திரையுலக பிரமுகர் விருது வழங்கப்படுகிறது.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நேற்று அறிவித்தார்.

நவம்பர் 20-ம் தேதி தொடங்கவுள்ள இந்த விழாவில் தலைமை விருந்தினராக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கலந்துகொள்கிறார். இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 75 நாடுகள் பங்கேற்கின்றன. 60-க்கும் மேலான அயல்நாட்டு திரைப்படங்களும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 7 திரைப்படங்களும் இந்த திரைப்பட விழாவில் பங்கேற்கின்றன.

ஈரான் இயக்குநர் மோசன் மக்மாபஃப் என்பவரின் 'தி பிரசிடெண்ட்' என்ற திரைப் படத்துடன் கோவா திரைப்பட விழா தொடங்குகிறது.

SCROLL FOR NEXT