தமிழ் சினிமா

மே 1-ம் தேதி வெளியாகிறது விவேகம் டீஸர்: படக்குழு முடிவு

ஸ்கிரீனன்

அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி 'விவேகம்' படத்தின் டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்றது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் பல்கேரியாவில் கலந்து கொண்டுள்ளது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், இப்படத்தின் டீஸர் வெளியீடு குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இது குறித்து படக்குழுவினரிடம் கேட்ட போது, "மே 1ம் தேதி டீஸர் உறுதியாக வெளியாகும்" என்று தெரிவித்தார்கள்.

மேலும், 'விவேகம்' படத்தின் எடிட்டரான ரூபன் பல்கேரியாவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள படக்குழுவினரிடம் டீஸரின் இறுதிவடிவம் குறித்த பேச்சுவார்த்தை முடித்து திரும்புவார் என தெரிகிறது.

தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்போடு, மொத்த படப்பிடிப்பும் முடிவு பெறுகிறது. இறுதிகட்ட பணிகள் முடித்து, ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT