தமிழ் சினிமா

இமைக்கா நொடிகள் அப்டேட்: சண்டைக்காட்சியை வடிவமைக்கும் லீ ஹான் யூ

ஸ்கிரீனன்

'இமைக்கா நொடிகள்' படத்தில் இடம்பெறும் சைக்கிள் சன்டைக்காட்சியை வடிவமைத்து வருகிறார் ஹாங்காங்கைச் சேர்ந்த லீ ஹான் யூ.

'இமைக்கா நொடிகள்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் படத்தின் பிரதான இடத்தில், இடம்பெறும் சைக்கிள் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.

இச்சண்டைக்காட்சியை வடிவமைப்பதற்காக ஹாங்காக்கிலிருந்து லீ ஹான் யூவை அழைத்து வந்துள்ளது படக்குழு. இவர் பல்வேறு படங்களில் இடம்பெற்ற சைக்கிள் சண்டைக்காட்சியை வடிவமைத்தவராவார்.

இப்படத்தில் அதர்வாவுக்கு நிறைய தத்ரூபமான சண்டைக்காட்சிகள் இருப்பதால், இச்சண்டைக்காட்சியை இவர் வடிவமைத்தால் மட்டுமே சரியாக இருக்கும் எனக் கருதியுள்ளது படக்குழு.

அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இப்படத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா, இயக்குநர் அனுராக் கஷ்யாப் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பதின் மூலம், தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் இயக்குநர் அனுராக் கஷ்யாப் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT