மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கினார்.
கதை, திரைக்கதை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்துவிட்டதால், தற்போது நடிகர் - நடிகைகளைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. மெட்ராஸ் டாக்கீஸ் படத்தைத் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இக்கூட்டணி 'தளபதி', 'ரோஜா', 'இருவர்', 'உயிரே' மற்றும் 'ராவணன்' உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.
ராம்சரண், அரவிந்த்சாமி உள்ளிட்டவர்கள் நடிக்கவிருபப்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழுவினர் இன்னும் எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது 'காற்று வெளியிடை' நாயகியான அதிதி ராவ் இதிலும் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.