தமிழ் சினிமா

தணிக்கையில் யு: விரைவில் வெளியாகிறது கதாநாயகன்

ஸ்கிரீனன்

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'கதாநாயகன்' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

'மாவீரன் கிட்டு' படப்பணிகளை முடித்துவிட்டு, புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கத்தில் உருவாகி வந்த 'கதாநாயகன்' படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் விஷ்ணு விஷால்.

அவரே தயாரித்து வந்த இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தன. அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. 'யு' சான்றிதழ் கிடைக்கவே மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

தற்போது தமிழ் திரையுலகில் நிலவும் வரிப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்தவுடன் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கேத்தரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

'கதாநாயகன்' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' மற்றும் 'ராட்சசன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால்.

SCROLL FOR NEXT