தமிழ் சினிமா

தணிக்கையில் யு சான்றிதழ்: ஜூலை 14-ல் வெளியாகிறது ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்

ஸ்கிரீனன்

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனையடுத்து படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது.

அதர்வா, சூரி, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணீதா, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்'. ஓடம். இளவரசு இயக்கியுள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளிக்கவே, ஜூலை 14-ம் தேதி வெளியீடு என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இப்பட பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து 'இமைக்கா நொடிகள்' படத்தின் இறுதிகட்ட பணியில் கலந்து கொண்டுள்ளார் அதர்வா.

SCROLL FOR NEXT