தமிழ் சினிமா

உதயநிதியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி நாயர்

ஸ்கிரீனன்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள 'மகேஷிண்ட பிரதிகாரம்' தமிழ் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பார்வதி நாயர்.

'மகேஷிண்ட பிரதிகாரம்' படத்தின் தமிழ் ரீமேக்கின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஃபகத் பாசில் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். பிரியதர்ஷன் இயக்கவுள்ளார்.

நமீதா ப்ரமோத், எம்.எஸ்.பாஸ்கர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது இப்படத்தின் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பார்வதி நாயர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழுக்கு ஏற்றவாறு கொஞ்சம் காமெடி சேர்த்துள்ளார் பிரியதர்ஷன். இம்மாதத்தில் தேனியில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரே கட்டமாக மொத்த படத்தை முடிக்க முடிவு செய்துள்ளார்கள்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்' மற்றும் 'இப்படை வெல்லும்' ஆகிய படங்களின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT