அறிவழகன் இயக்கவுள்ள புதிய படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'குற்றம் 23' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் அறிவழகன். தற்போது கதை, திரைக்கதை உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
முந்தைய படங்களைப் போலவே, இப்படமும் வித்தியாசமான கதைக்களத்தோடு இருக்கும் என்கிறார்கள். இதில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம்வரும் மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தாண்டிற்குள் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின் இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
'குற்றம் 23' படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களே, இதிலும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.