தமிழ் சினிமா

விஜய் சந்தர் - விக்ரம் இணையும் ஸ்கெட்ச்: பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஸ்கிரீனன்

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்துக்கு 'ஸ்கெட்ச்' என பெயரிட்டுள்ளது படக்குழு.

'வாலு' படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் புதிய படத்தைத் தொடங்கினார் இயக்குநர் விஜய் சந்தர். இப்படத்தின் நாயகிக்கு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

முதலில் ஒப்பந்தமான சாய்பல்லவி விலகவே, தற்போது தமன்னா நாயகியாக நடித்து வருகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார்.

'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50% படப்பிடிப்பை கடந்துள்ளதால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது.

மே மாதத்துக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 'துருவ நட்சத்திரம்' படத்துக்கு முன்பாகவே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இப்படத்தை முடித்துவிட்டு 'துருவநட்சத்திரம்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விக்ரம். இதற்காக அமெரிக்காவுக்கு செல்லவுள்ளது படக்குழு.

SCROLL FOR NEXT