தமிழ் சினிமா

தணிக்கையில் யு/ஏ சான்றிதழ்: செப்.2ல் வெளியாகிறது குற்றமே தண்டனை

ஸ்கிரீனன்

மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 'குற்றமே தண்டனை' திரைப்படம் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

'காக்கா முட்டை' படத்தைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கத்தில் உருவான படம் 'குற்றமே தண்டனை'. விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரையரங்க வெளியீட்டு சரியான தேதிக்காக காத்திருந்தார்கள். தற்போது தணிக்கைப் பணிகளும் முடிவுற்று இருப்பதால் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படத்துக்கு தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' படத்தை இயக்கி வந்தார் மணிகண்டன். அப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT