தமிழ் சினிமா

ஜி.வி ஜோடியாக ஸ்ரீதிவ்யா

ஸ்கிரீனன்

இசையமைப்பாளர், தயாரிப்பாளரைத் தொடர்ந்து தற்போது நாயகனாகவும் அறிமுகமாகிறார் ஜி.வி.பிரகாஷ்.

கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த மணி இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் ஜி.வி. படத்திற்கு 'பென்சில்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இதில் 12ம் வகுப்பு மாணவராக நடிக்கிறார் ஜி.வி. நாயகியாக யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ப்ரியா ஆனந்த் என்று செய்திகள் நிலவின, ஆனால் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் நாயகி ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்க ஒப்ப்பந்தமாகி இருக்கிறார்.

நடிக்க மட்டுமன்றி இப்படத்திற்கு இசையமைக்கவும் இருக்கிறார் ஜி.வி.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

SCROLL FOR NEXT