தமிழ் சினிமா

24 இயக்குநர் விக்ரம் குமார் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

'24' இயக்குநர் விக்ரம் குமார் - ஸ்ரீநிதி வெங்கடேசன் இருவரின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

'யாவரும் நலம்', '24', 'மனம்(தெலுங்கு)' ஆகிய வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் விக்ரம் குமார். '24' படத்தில் சவுண்ட் இன்ஜினியராகப் பணியாற்றினார் ஸ்ரீநிதி. அங்குதான் இவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. படத்திற்கு நடுவில் நட்பு மலர்ந்து, ஜூனில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விக்ரம் குமார் - ஸ்ரீநிதி இருவரின் திருமணம் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இருவரின் குடும்பத்தினர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

'24' படத்தைத் தொடர்ந்து நாகார்ஜுனின் இளைய மகன் அகில் நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார் விக்ரம்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT