தமிழ் சினிமா

வேலையில்லா பட்டதாரி 2 அப்டேட்: ஜூலை 14-ல் வெளியிட திட்டம்

ஸ்கிரீனன்

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை, ஜூலை 14-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மற்ற பணிகளையும் படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.

2014-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி 'வேலையில்லா பட்டதாரி' வெளியானது. இந்த ஆண்டு, ஜூலை 18-ம் தேதி செவ்வாய்கிழமையாக இருப்பதால், ஜூலை 14-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது.

'வேலையில்லா பட்டதாரி 2' படப்பணிகள் முடித்தவுடன், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வடசென்னை' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.

SCROLL FOR NEXT