தமிழ் சினிமா

அருண் விஜய்யின் தடம் படப்பிடிப்பு தொடங்கியது

ஸ்கிரீனன்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'தடம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது.

'குற்றம் 23' படத்தைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் அருண் விஜய். 'தடம்' என பெயரிடப்பட்ட இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்தர்குமார் தயாரிக்கவுள்ள இப்படத்தில் 2 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இதற்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பை இயக்குநர் ஹரி தொடங்கிவைத்தார்.

அதிக பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் அருண்விஜய் 2 வேடங்களில் நடிக்கவுள்ளார் . பெப்சி விஜயன் மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

SCROLL FOR NEXT