தமிழ் சினிமா

நவம்பர் 22 முதல் இரண்டாம் உலகம்

ஸ்கிரீனன்

'இரண்டாம் உலகம்' படத்திற்கு 'யு' சான்றிதழ், நவம்பர் 22ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கியுள்ள மெகா பட்ஜெட் படம் 'இரண்டாம் உலகம்'. PVP சினிமாஸ் தயாரித்தது.

படத்தின் பாடல்களுக்கு மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் பொறுப்பேற்க, பின்னணி இசையை அனிருத் அமைத்திருக்கிறார்.

இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. ஜார்ஜியா நாட்டில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் 'இரண்டாம் உலகம்'. படத்தில் கிராபிக்ஸ் பணிகள் நிறைய இருந்ததால் படம் தாமதமானது.

அனைத்து பணிகளும் முடிந்து தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சென்சார் பணிகள் முடிந்துவிட்டதால், நவம்பர் 22ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், எந்த ஒரு இடத்தையும் கட் செய்யச் சொல்லாமல் 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

அனுஷ்காவிற்கு இருக்கும் தெலுங்கு மார்க்கெட்டையும் கணக்கில் கொண்டு நவம்பர் 22ம் தேதியே 'வர்ணா' என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும், பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறது PVP நிறுவனம்.

SCROLL FOR NEXT