தமிழ் சினிமா

கார்த்தியின் காஷ்மோரா பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஸ்கிரீனன்

கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'காஷ்மோரா' படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காஷ்மோரா'. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, கிராபிக்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

இப்படத்தின் 3 கெட்டப்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. காஷ்மோரா, ராஜ்நாயக் மற்றும் இன்னொரு கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு. முதன்முறையாக இப்படத்தில் ரத்தின மகாதேவி என்கிற இளவரசி பாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. முழுக்க பில்லி, சூனியம் ஆகியவற்றை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் கோகுல். இப்படத்தின் டீஸர் செப்டம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டது. வித்தியாசமான கெட்டப் உடன் இருக்கும் கார்த்தி இருக்கும் போஸ்டர் வடிவமைப்புக்கு திரையுலகினர் தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழில் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும், தெலுங்கில் பிவிபி சினிமாஸ் நிறுவனமும் வெளியிட இருக்கிறது.

SCROLL FOR NEXT