தமிழ் சினிமா

தீபாவளிக்கு வெளியாகிறது கொடி- தனுஷ் அறிவிப்பு

ஸ்கிரீனன்

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கொடி' தீபாவளிக்கு வெளியாகும் என தனுஷ் அறிவித்திருக்கிறார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கொடி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

முதன் முறையாக இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். இரண்டு பாத்திரங்கள் குறித்து படக்குழு, "இரட்டையராக அரசியல்வாதி மற்றும் பேராசிரியர் என 2 வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். அன்பு மற்றும் கொடி ஆகியவை தான் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர்கள்.

இப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி நிலவி வந்தது. இதுவரை இப்படத்தின் பர்ஸ்ட் லுக், புகைப்படங்கள், டீஸர் என எதுவுமே வெளியாகவில்லை. "செப்டம்பரில் ’தொடரி’ வெளியீட்டைத் தொடர்ந்து ’கொடி’ தீபாவளிக்கு வெளியாகும்" என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

'காஷ்மோரா' மற்றும் 'கத்தி சண்டை' ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடு என்று விளம்பரப்படுத்தி விட்டார்கள். அவற்றோடு 'கொடி'யும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT