முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
சசிகுமார், லட்சுமிமேனன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'குட்டிப்புலி'. வசூல் ரீதியில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது, முத்தையா இப்படத்தின் மூலமாக தான் இயக்குநராக அறிமுகமானார்.
'மருது' படத்தைத் தொடர்ந்து சூர்யாவுக்கு கதை ஒன்றை தயார் செய்து வருவதாகவும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது அப்படம் கைவிடப்பட்டுள்ளது.
சூர்யாவுக்காக தயார் செய்த கதையை சசிகுமாரை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார் முத்தையா. தற்போது முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
'கொடி வீரன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகி கதாபாத்திரத்துக்கு ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. ஹன்சிகா நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும், விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.