தமிழ் சினிமா

மீண்டும் இணையும் பாலா - விஷால்!

ஸ்கிரீனன்

அடுத்தாண்டு மீண்டும் விஷால் - பாலா இணைந்து படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்த படம் 'அவன் இவன்'. விமர்சகர்கள் மத்தியில் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் அப்படத்தில் விஷாலின் நடிப்பிற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்தது.

அப்போதே, மீண்டும் நான் பாலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் விஷால். ஆனால் எப்போது என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது திரு இயக்கும் மூன்றாவது படத்திலும் நாயகனாக நடித்து, தயாரிக்க இருக்கிறர் விஷால். அப்படத்தினைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால்.

அடுத்தாண்டு தேதிகளை வைத்திருக்கும்படி பாலா தன்னிடம் கூறியதாகவும், விரைவில் பாலா தரப்பில் இருந்து முறையான அறிவிப்பு வரும் என்று அறிவித்திருக்கிறார் விஷால்.

SCROLL FOR NEXT