தமிழ் சினிமா

தணிக்கையில் யு சான்றிதழ்: மே 5-ல் வெளியாகிறது தொண்டன்

ஸ்கிரீனன்

'தொண்டன்' படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மே 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தொண்டன்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமுத்திரக்கனி இயக்கியுள்ள படத்தை மணிகண்டன் தயாரித்துள்ளார்.

ஒரே கட்டமாக படப்பிடிப்பு முடிக்கப்பட்ட, இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கவே, சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தார்கள்.

இறுதியாக, மே 5ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

'தொண்டன்' படத்தைத் தொடர்ந்து ஜெயராம் நடிப்பில் உருவாகும் 'அப்பா' மலையாள ரீமேக்கை இயக்கி வருகிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.

SCROLL FOR NEXT