தமிழ் சினிமா

சில விருதுகள் கேலிக்கூத்தானவை: அரவிந்த் சாமி காட்டம்

ஸ்கிரீனன்

சில விருதுகள் கேலிக்கூத்தானவது என்று அரவிந்த் சாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் 'தனி ஒருவன்'. இப்படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் அரவிந்த் சாமியின் நடிப்பை முன்வைத்து பல்வேறு விருதுகள் கிடைத்தது.

இந்நிலையில் அரவிந்த் சாமி, "சில விருதுகள் கேலிக்கூத்தானவை. நிகழ்ச்சிக்கு வாருங்கள் என அழைக்கும்போதே சொல்வார்கள் 'நீங்கள் ஒரு விருது பெற்றுள்ளீர்கள்' என்று.

அப்போது நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள் "என்னால் நிகழ்ச்சிக்கு வரமுடியாது விருதை வேறு யாருக்காவது வழங்குங்கள். எல்லா நடிகர்களும் அவர்களுடைய உழைப்புக்காக விருது பெற தகுதியானவர்களே.

எனவே நீங்கள் விரும்பும் யாராவது ஒருவருக்கு அந்த விருதைக் கொடுங்கள்" என்று. விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தேர்தலைப் போல் ஆக்காதீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த விருது வழங்கும் விழாவுக்காக இப்படி ட்வீட் செய்துள்ளார் என்பது குறித்து அரவிந்த்சாமி குறிப்பிடவில்லை.

SCROLL FOR NEXT