லிங்குசாமி இயக்கி வரும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி சமந்தா தான் என்று மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
சூர்யா, சமந்தா, மனோஜ் பாஜ்பாய் மற்றும் பலர் நடிக்கும் படத்தினை லிங்குசாமி இயக்கி வந்தார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், சமந்தாவிற்கு மீண்டும் தோல் அலர்ஜி பிரச்சினை ஏற்பட்டு இருப்பதால், அவர் இப்படத்தில் நடிக்க மாட்டார் என்று செய்திகள் வெளியாகின.இதனால், சூர்யாவுக்கு ஜோடி யார் என்ற பரபரப்பு நிலவியது.
தற்போது, சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா தான் நடிக்கிறார் என்று மீண்டும் அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "லிங்குசாமி தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் சமந்தா தான் ஜோடியாக நடிக்கிறார்.
அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது. டிசம்பர் 7ம் தேதி முதல் சூர்யாவுடன் நடிக்கவிருக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.