தமிழ் சினிமா

நெட்டிசன் நோட்ஸ்: இறைவி - தெய்வ லெவல்!

க.சே.ரமணி பிரபா தேவி

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, கமலினி முகர்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'இறைவி'. இவர்களாலேயே படத்தின் எதிர்பார்ப்பு எகிற, படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

பெண்கள் மீதான மரியாதை 'இறைவி'யால் வருவதல்ல.. பிறவியால் வருவது..

ஆண் என்னும் ஆதிக்கம் இல்லாமல் பார்த்தால் தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம் இறைவி.

ஒரு நாளில் 1440 நிமிஷங்க இருக்கு, ஆனா அந்த நாளை இனிமையாக்க ஒரு சில நிமிஷங்கள் போதும் # அப்படி சில சரவெடி சீன்ஸ்காக பார்க்கலாம், இறைவி

மொத்தத்தில தமிழ் சினிமாவோட மறுபிறவி இந்த இறைவி...

சுத்தி அடித்து, சிலை சுட்டு, நெடில் கொன்று, குறில் மழையில் நனைந்து வாழ்ந்தது இறைவி.

இறைவி - தெய்வ லெவல்

இறைவி படம் நல்ல இல்லா சொன்ன திட்றாங்க, அடேய் எனக்கு தோணுறதான் சொல்ல முடியும் :(

சிலரது அபிப்ராயங்களால் தவறவிட்டிருக்கக் கூடிய அபாயம் இருந்தது; நல்லவேளை பார்த்துவிட்டேன் #இறைவி. உங்களுக்கு நேரமும் காசும் இருந்தால் மட்டும்.

பாதியிலேயே தோற்றுப்போன அசாதாரணமான அசுர முயற்சி..!

காலத்தை தாண்டி நின்றிருக்க வேண்டிய படைப்பு. பெண்களை ஆதரிக்கிறோம் என்ற நிலையில் சுருங்கி குழம்பி கசங்கி நம்மை கவலையோடு வெளியே அனுப்புகிறது..!

SJசூர்யா > விஜய்சேதுபதி > பாபிசிம்ஹா #இறைவி

இறைவி! கார்த்திக் சுப்புராஜின் அருமையான படைப்பு.தமிழ்ப் படங்கள் இப்படி வருவது அபூர்வமானது. கதையை நகர்த்திய விதம், சொல்லாடலின் அர்த்தங்கள் புரிய நமக்கு மற்றுமொரு பார்வை தேவை. சந்தோஷின் இசை ஜாலம் செய்கின்றது; சூர்யா நடிப்பில் நல்ல முன்னேற்றம். இது ஒரு மன உளவியல் சார்ந்த திரைப்படம்..,

படம் பார்த்தவுடன் செல்வராகவன், ராம் போன்றோரின் படத்தை பார்த்த பாதிப்பு ஏற்பட்டது.. #இறைவி

இறைவி பார்த்த அனைத்து ஆண்களும் ஒரு குற்ற உணர்ச்சியுடன் தான் திரையரங்கை விட்டு வெளியே வருவார்கள், அந்த வகையில் இறைவி ஜெயித்துவிட்டாள்.

அவள் ஓர் இறைவி. ஆம். அவள் ஒரு தொடர்கதையின் நவீன வடிவம்தான் இறைவி.

இறைவில அப்படி என்னதான் இருக்கு? ஒவ்வொருத்தரும் தினுசு தினுசா பொலம்புறாங்க!

க்ளைமேக்ஸ்ல சூர்யா பேசுற டயலாக் மட்டும்தான் செம்ம... ஆனா அதுக்காக 3 மணி நேரம் சும்மா உக்காந்துருக்க முடியாது.

மாற்று சினிமா எடுக்குறேன்னு சினிமால உள்ளவங்களை சினிமாக்காரங்களே கேவலப்படுத்திக்கறாங்க. #இறைவி

இவ்வுலகமும், மனிதர்களும் எங்கு சென்றாலும், எதை செய்தாலும் அனைத்துமே இறுதியில் பெண்மையை நோக்கித்தான் என்பதை உணர்த்துகிறது இறைவி.

இவிங்க கூவுன அளவுக்கெல்லாம் இல்லயேடா... சில நல்ல மொமென்ட்ஸோட ஒரு அபோவ் ஆவரேஜ் படம் அவ்ளோதான்...#இறைவி

கோபத்தை அடக்குறதுக்கு நாம என்ன பொம்பளயா.? ஆம்பளடா... என்ன கேவலமான ஆண் பொறப்பு! இறைவியின் க்ளைமாக்ஸ் செருப்படி...

சில உண்மை கசக்கும், சில உண்மை அறுவருக்கும், சில உண்மை நம்ம நெஞ்சுலயே குத்தும் அப்படினு சொல்வாங்கள்ல, அப்படிப்பட்ட ஒரு உண்மைதான் #இறைவி

SCROLL FOR NEXT