'மான் கராத்தே' படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பார்த்து, படம் கண்டிப்பாக வசூல் சாதனை புரியும் என்ற பேச்சு நிலவுகிறது.
சிவகார்த்திகேயன், ஹன்சிகா, கிருஷ்ண வம்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'மான் கராத்தே'. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை திருக்குமரன் இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.
இப்படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு 'U' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிந்ததை தொடர்ந்து, ஏப்ரல் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் படத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. படத்தின் வியாபாரத்தால் கடும் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.
கிட்டதட்ட 500 திரையரங்குகளுக்கும் அதிகமாக இப்படம் வெளியாவதால், படம் கண்டிப்பாக வசூல் சாதனை புரியும் என்ற பேச்சு நிலவி வருகிறது.