தமிழ் சினிமா

4 நாட்களில் 100 கோடி வசூல்: பைரவா படக்குழு தகவல்

ஸ்கிரீனன்

'பைரவா' வெளியான 4 நாட்களில், 100 கோடி வசூலைத் தாண்டியதாக படக்குழு அதிகாரபூர்வமாக விளம்பரத்தில் தெரிவித்துள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பைரவா'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியாகியுள்ள இப்படத்தை விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்ரீக்ரீன் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், படத்தின் முதல் நாள் வசூல் 16.61 கோடி என ஸ்ரீக்ரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.

இப்படம் பற்றிய பல்வேறு தகவல்கள், விமர்சனங்கள், வசூல் நிலவரங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், படக்குழு இன்று வெளியிட்ட விளம்பரத்தில் 'திரையிட்ட நான்கு நாட்களில் 100 கோடி வசூலைத் தாண்டிய வெற்றிப் படம்' என்று தெரிவித்துள்ளது.

'பைரவா' படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT